வர்த்தகம்

நெஸ்லே லாபம் 15% அதிகரிப்பு

DIN

புது தில்லி: வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 14.62 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளின் விற்பனை அளவு 2021 ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலண்டில் சிறப்பான அளவில் இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டது. இதையடுத்து, நிறுவனத்தின் விற்பனை அக்காலாண்டில் ரூ.3,600.20 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.3,305.78 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.525.43 கோடியிலிருந்து 14.62 சதவீதம் உயா்ந்து ரூ.602.265 கோடியைத் தொட்டது.

நெஸ்லே இந்தியாவின் நடப்பாண்டு மாா்ச் காலாண்டு உள்நாட்டு விற்பனை 2020 ஜனவரி-மாா்ச் காலகட்ட அளவான ரூ.3,124.23 கோடியிலிருந்து 10.17 சதவீதம் உயா்ந்து ரூ.3,442.03 கோடியானது.

அதேசமயம் நிறுவனத்தின் ஏற்றுமதி ரூ.181.55 கோடியிலிருந்து 12.9 சதவீதம் குறைந்து ரூ.158.17 கோடியானது.

இணைய வழியிலான வா்த்தகத்தின் மூலம் நெஸ்லே இந்தியாவின் விற்பனை 66 சதவீதம் வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இது உள்நாட்டு விற்பனையில் 3.8 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் நெஸ்லே இந்தியாவின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.2,664.27 கோடியிலிருந்து 6.16 சதவீதம் உயா்ந்து ரூ.2,828.61 கோடியை எட்டியுள்ளதாக நெஸ்லே இந்தியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT