வர்த்தகம்

டேட்டிங் ஆப்களை பயன்படுத்த 33% மக்களுக்கு அச்சம்: ஆய்வு

DIN


போலி கணக்குகளால் டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்த 33 சதவிகிதத்தினர் அச்சம் தெரிவித்துள்ளதாக ஆய்வு ஒன்றில்  தெரியவந்துள்ளது.

டேட்டிங் ஆப்களை பயன்படுத்துவோரிடையே உள்ள நிலையற்ற நம்பகத்தன்மை மற்றும் இணையவழி மோசடிகளே இதற்கு காரணம் என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.

இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை நடத்திய ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளது.

டேட்டிங் ஆப்கள் மூலம் 27 சதவிகிதத்தினர் இணையவழியில் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேலும் 36 சதவிகிதத்தினர் மோசடி செய்பவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கேஸ்பர்ஸ்கை பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் ஜேகோபி கூறுகையில், டேட்டிங் ஆப்கள் பயன்பாடு அச்சம் நிறைந்ததாகவே உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதே அந்த அச்சத்திற்கான தொடக்கம் என்றும் தெரிவித்தார். 

டேட்டிங் ஆப்களில் போலி கணக்குகள் மூலம் 33 சதவிகிதத்தினரும், வைரஸ் நிறைந்த லிங்க்குகள் மற்றும் தரவுகள் மூலம் 38 சதவிகிதத்தினரும், தரவுகள் திருடப்படுவதாக 36 சதவிகிதத்தினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விடியோ அழைப்புகளுக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம் சந்தேகம் ஏற்படுவதாக 29 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT