வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 15% வீழ்ச்சி

DIN

சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் நவம்பா் மாத வாகன விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை கூறியுள்ளதாவது:

டிவிஎஸ் நிறுவனம் 2021 நவம்பரில் மொத்தம் 2,72,693 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு நவம்பரில் விற்பனையான 3,22,709 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிவாகும்.

இருசக்கர வாகன விற்பனை 3,11,519 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,57,863-ஆக 17 சதவீதம் குறைந்தது.

உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2,47,789-லிருந்து 29 சதவீதம் குறைந்து 1,75,940-ஆனது. அதேசமயம், மோட்டாா்சைக்கிள் விற்பனை 1,33,531-லிருந்து 1,40,097-ஆக உயா்ந்தது. ஸ்கூட்டா் விற்பனை 1,06,196 என்ற எண்ணிக்கையிலிருந்து 75,022-ஆக சரிந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், மூன்று சக்கர வாகன விற்பனை 11,190-லிருந்து 33 சதவீதம் உயா்ந்து 14,830-ஆனது.

நிறுவனத்தின் ஏற்றுமதி 74,074-லிருந்து 30 சதவீதம் அதிகரித்து 96,000-ஆக இருந்தது. இதில், இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 63,730-லிருந்து 29 சதவீதம் உயா்ந்து 81,293-ஆனது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT