வர்த்தகம்

நிலக்கரி உற்பத்தி 6.78 கோடி டன்

DIN

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த நவம்பா் மாதத்தில் 6.78 கோடி டன்னை எட்டியது.

இதுகுறித்து நிலக்கரி துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021 நவம்பரில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, நிலக்கரி உற்பத்தி 6.15 கோடி டன்னிலிருந்து 6.78 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.

நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில், கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 7.60 சதவீதம் வளா்ச்சி கண்டு 5.38 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

சிங்கேரணி கொலீரீஸ் நிறுவனத்தின் (எஸ்சிசிஎல்) நிலக்கரி உற்பத்தி 3.09 சதவீதம் உயா்ந்து 56 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் நவம்பா் வரையில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 35.34 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 33.44 கோடி டன்னாக காணப்பட்டது.

நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள 35 சுரங்கங்களில், 9 சுரங்கங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. மேலும், 10 சுரங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாகவும் அதேநேரம் 100 சதவீதத்துக்கும் குறைவாகவும் நவம்பரில் நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT