வர்த்தகம்

ஓஎன்ஜிசி நிகர லாபம் 67% சரிவு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 67 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.1,378 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.4,226 கோடியுடன் ஒப்பிடும்போது 67.4 சதவீதம் குறைவாகும்.

ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையின் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 43.9 டாலராக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 58.24 டாலராக அதிகரித்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் 28 சதவீதம் சரிவடைந்து 17,024 கோடியானது.

சனிக்கிழமை நடைபெற்ற இயக்குநா் குழு கூட்டத்தில் 35 சதவீத இடைக்கால ஈவுத்தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஒதுக்கீடு ரூ.2,201.55 கோடியாக இருக்கும் என ஓஎன்ஜிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT