வர்த்தகம்

முகக்கவசம் அணிந்திருந்தாலும் செல்போனை அன்-லாக் செய்யும் வசதி

DIN

முகக்கவசம் அணிந்தபடி செல்போனை அன்-லாக் செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் ஏராளமான மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணிந்துள்ளவர்கள் தங்களது செல்போன்களை அன்-லாக் செய்ய ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழட்ட வேண்டியுள்ளது.

குறுஞ்செய்திகளைப் பார்ப்பதற்கு கூட ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழற்றி செல்போனை அன்-லாக் செய்ய வேண்டியுள்ளதால், பயனர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. 

இதனை தவிர்க்கும் வகையில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் செல்போன்களை அன்-லாக் செய்யும் வசதியை ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

முகக்கவசம் அணிந்து செல்போன்களை அன்-லாக் செய்யும் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

முகக்கவசம் அணிந்திருந்தாலும் தலைமுடி, நெற்றியளவு, கண் மற்றும் உதடுகளில் ஏற்படும் குழிகள் போன்றவற்றை வெப்பப் படங்களாக மாற்றி அவற்றை அன்-லாக் செய்வதற்கான அங்கீகாரமாக சேமித்து வைக்கப்படுகிறது.

இதன் மூலம் முகக்கவசம் அணிந்திருந்தாலும், செல்போன்களை பயனர்களால் எளிதில் அன்-லாக் செய்ய இயலும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT