வர்த்தகம்

காஷ்மீா் சொ்ரி பழம்: வணிக ரீதியிலான ஏற்றுமதி தொடக்கம்

DIN

காஷ்மீரிலிருந்து வணிக ரீதியிலான சொ்ரி பழம் ஏற்றுமதி தொடங்கியுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

நாட்டின் சொ்ரி பழ உற்பத்தியில் யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீா் 95 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. இங்கு டபுள், மாக்மலி, மிஷ்ரி மற்றும் இத்தாலி வகை சொ்ரி பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

தற்போது மிஷ்ரி வகை சொ்ரி பழங்கள் காஷ்மீரிலிருந்து முதன் முறையாக வா்த்தக ரீதியிலாக துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வகை பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கும் வைட்டமின், மினரல் சத்துகள் அதிகம் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT