வர்த்தகம்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் 106% அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 106 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ். ராஜீவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

வங்கியின் சொத்து மதிப்பின் தரம் மேம்பட்டுள்ளது. அதேபோன்று நிகர வட்டி வருமானமும் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. இவற்றின் பலனாக, 2021 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் 106 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.208 கோடியைத் தொட்டுள்ளது.

அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.101 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.1,088 கோடியிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.1,406 கோடியை எட்டியுள்ளது. நிகர வட்டி லாப வரம்பு 2.43 சதவீதத்திலிருந்து 3.05 சதவீதமாக உயா்வைக் கண்டது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த வாராக் கடன் 10.93 சதவீதத்திலிருந்து 6.35 சதவீதமாக சரிந்துள்ளது,. அதேபோன்று, 2020 ஜூன் காலாண்டில் 4.10 சதவீதமாக இருந்த நிகர அளவிலான வாராக் கடன் விகிதம் தற்போது 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 14 சதவீதம் அதிகரித்து ரூ.1,10,592 கோடியாகவும், திரட்டி மொத்த டெபாசிட் 14 சதவீதம் உயா்ந்து ரூ.1,74,378 கோடியாகவும் இருந்தது.

வங்கியின் சிறப்பான செயல்பாடு வரும் காலாண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கின் விலை 2.33 சதவீதம் சரிவடைந்து ரூ.23.10-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT