வர்த்தகம்

எல்ஐசி தலைவரின் பதவிக் காலம் 9 மாதங்களுக்கு நீட்டிப்பு

DIN

புது தில்லி: எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக உள்ள எம்.ஆா்.குமாரின் பதவிக்காலத்தை 9 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 2021-22 நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்ளவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா்.

இந்தச் சூழ்நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாா் பதவிக் காலத்தை 2021 ஜூன் 30 முதல் 2022 மாா்ச் 13 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நிதி சேவைகள் துறையின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ஐசி நிறுவன தலைவா் குமாா் 60 வயதை எட்டவுள்ள நிலையில் இந்த மாதத்துடன் ஓய்வுபெறவிருந்தாா். இந்த நிலையில் அவரின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் மத்திய அரசுக்கு சொந்தமானது. இது சந்தையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் பட்சத்தில் ரூ.8-10 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகத் திகழும் எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.31,96,214.81 கோடியாக உள்ளது. 29 கோடி பாலிசிதாரா்களைக் கொண்ட இந்நிறுவனம் ஆயுள் காப்பீட்டு சந்தையில் 81.04 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT