வர்த்தகம்

பாட்டா இந்தியா லாபம் ரூ.29 கோடி

DIN

காலணி தயாரிப்பில் முன்னிலையில் உள்ள பாட்டா இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 23 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.589.90 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.620.57 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.38.40 கோடியிலிருந்து 23 சதவீதம் குறைந்து ரூ.29 கோடியானது.

மொத்த செலவினம் ரூ.579.46 கோடியிலிருந்து 2.69 சதவீதம் குறைந்து ரூ.563.90 கோடியானது.

மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பாட்டா இந்தியா ரூ.89.31 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.32.89 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டில் வருவாய் ரூ.3,056.11 கோடியிலிருந்து 44.1 சதவீதம் சரிவடைந்து ரூ.1,708.48 கோடியானது.

டிவிடெண்ட்: கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.5 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு ரூ.4 (80 சதவீதம்) டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக பாட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT