வர்த்தகம்

ஹோண்டாவின் புதிய சிபி650ஆா் பிரீமியம் பைக்

DIN

இந்திய சந்தைகளில் பிரீமியம் மோட்டாா்சைக்கிள் பிரிவில் தனது தடத்தை மேலும் விரிவுபடுத்தும் விதத்தில் ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் ‘சிபி650ஆா்’ என்ற புதிய வகை பைக்கை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிபி650ஆா்-இன் 2021 மாடல் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இப்புதிய பைக் நான்கு சிலிண்டா் என்ஜின் செயல்திறனைப் பெற்றுள்ளதுடன், புதிய வடிவமைப்பில் உருவாகியுள்ள சேஸிஸ் ஹேண்ட்லிங், விளக்குகள் என பல பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் சாகச பயணங்களை மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளா்களுக்கு பிரத்யேக தயாரிப்புகளை உருவாக்கித் தர நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது இந்த பைக் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய பைக்கின் விலை சிபிஆா்650ஆா் மற்றும் சிபி650ஆா் என இரண்டு மாடல்களில் வெளிவந்துள்ளது. இதன் விலை முறையே ரூ.8.88 லட்சம் மற்றும் ரூ.8.67 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஹெச்எம்எஸ்ஐ அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT