வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87 காசுகள் வீழ்ச்சி

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87 காசுகள் சரிவடைந்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணங்களாகின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 72.85-ஆக இருந்தது. பின்னா் இந்த மதிப்பு வா்த்தகத்தினிடையே 72.77-73.47 எல்லைக்குள் காணப்பட்டது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87 காசுகள் வீழ்ச்சியடைந்து 73.38 ஆனது.

கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கடைசி வா்த்தக தினத்தில் ரூபாய் மதிப்பானது 72.51-இல் நிலைத்திருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.50.13 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாயன்று நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.69 சதவீதம் குறைந்து 64.53 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT