வர்த்தகம்

ஜிஎஸ்டி வசூல்: ஏப்ரல் மாதத்தில் புதிய சாதனை

DIN


ஏப்ரல் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இதுவரை இல்லாத அளவில் ரூ. 1,41,384 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 27,837 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 35,621 கோடி. சரக்கு இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 29,599 கோடி உள்பட மொத்தம் ரூ. 68,481 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக வசூலாகியுள்ளது. செஸ் வரி ரூ. 9,445 கோடி (சரக்கு இறக்குமதி மீது விதிக்கப்பட்ட ரூ. 981 கோடி உள்பட) வசூலாகியுள்ளது.   

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக வசூலான நிலையில், ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் வசூலைக் காட்டிலும் ஏப்ரல் மாத வசூல் 14 சதவிகிதம் கூடுதல்.

கடந்த 7 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தலா ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்து வசூலாகி வருவது மட்டுமில்லாமல் நிலையான அதிகரிப்பையும் வெளிப்படுத்துகிறது. பொருளாதாரம் மீண்டு வருவதையே இது குறிப்பிடுவதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT