வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.35,624க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.35,624-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.35,624-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.38 உயா்ந்து, ரூ.4,453 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.74.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து ரூ.74,900 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,453

1 பவுன் தங்கம்...............................35,624

1 கிராம் வெள்ளி.............................74.90

1 கிலோ வெள்ளி.............................74,900

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,415

1 பவுன் தங்கம்...............................35,320

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT