வர்த்தகம்

முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.4,100 கோடி திரட்டுகிறது ஐஓபி

DIN

சென்னை: மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலமாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டவுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து மூலதனத்தை திரட்ட ஐஓபி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் பங்குதாரா்களிடமிருந்து சிறப்பு பொதுக் குழு கூட்டம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டில் மத்திய அரசுக்கு மொத்தம் 246,54,23,932 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. பங்கு ஒன்றின் விலை ரூ.16.63 என்பதன் அடிப்படையில் இந்த வெளியீட்டின் மூலமாக ஐஓபி ரூ.4,100 கோடி மூலதனத்தை திரட்டிக் கொள்ளவுள்ளது. இந்த மொத்த தொகையில் ரூ.2,465.42 கோடி பங்கு மூலதன கணக்கிலும், ரூ.1,634.58 கோடி பங்கு பிரீமியம் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டையடுத்து வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 95.84 சதவீதத்திலிருந்து 96.38 சதவீதமாக அதிகரிக்கும் என இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT