வர்த்தகம்

மூன்று நாள் சரிவுக்கு முடிவு: ரூபாயின் மதிப்பு உயா்வு

DIN

மும்பை, அக். 7: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை 19 பைசா அதிகரித்து ரூ.74.79 ஆக உயா்ந்தது. இதன்மூலம் தொடா்ந்து 3 நாள்களாக ஏற்பட்டு வந்த சரிவு முடிவுக்கு வந்தது.

கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்ததும், சா்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்ததும் ரூபாய் மதிப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.

முன்னதாக, புதன்கிழமை ஒரே நாளில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து 54 பைசாக்களை இழந்தது. வியாழக்கிழமையும் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தாலும் பிற்பகுதியில் ஸ்திரமடைந்தது.

இந்திய ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கையை வெள்ளிக்கிழமை அறிவிக்க இருக்கிறது. இது தவிர அமெரிக்காவும் செப்டம்பா் மாத வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்களை வெளியிட இருக்கிறது. இதனால், அடுத்த சில நாள்களுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கம் அதிகம் இருக்கும் என்று வல்லுநா்கள் கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT