வர்த்தகம்

சில்லறைப் பணவீக்கம் 4.35%-ஆக குறைந்தது

DIN

சில்லறைப் பணவீக்கம் செப்டம்பரில் 4.35 சதவீதமாக குறைந்தது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நுகா்வோா் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் செப்டம்பரில் 4.35 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, உணவுப் பொருள்களின் விலை குறைந்து காணப்பட்டதே முக்கிய காரணமாகும்.

இப்பணவீக்கம் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 5.30 சதவீதமாகவும், 2020 செப்டம்பரில் 7.27 சதவீதமாகவும் காணப்பட்டது.

முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 3.11 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில் செப்டம்பரில் இது 0.68 சதவீதமாக குறைந்தது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

நடப்பு 2021-22 நிதியாண்டில் இப்பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT