வர்த்தகம்

நிக்கான் புதிய ’மிரர் லெஸ் கேமரா’ அறிமுகம்

DIN

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான ‘நிக்கான்’ தன்னுடைய புதிய தயாரிப்பான ’மிரர் லெஸ்’ கேமராவை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

‘நிக்கான் இஸட் 9’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேமரா மிகத் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் , ‘ நிக்கான் இஸட் 9 கேமரா ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 8 கே விடியோக்களை 125 நிமிடங்கள் வரை பதிவுசெய்யலாம் , 3டி தோற்றத்தையும் புகைப்படங்கள் மூலம் உருவாக்கலாம் . மேலும் நிக்கான் வரலாற்றில் மிகச் சிறந்த விடியோ காட்சிகளைப் பதிவு செய்யும் விதமாக இஸட் 9 தயாரிக்கப்பட்டிருக்கிறது‘ எனத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.4,75,995 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நிக்கான் இஸட் 9 சிறப்பம்சங்கள்:

*8 கே விடியோ

*45.3 எம்பி போட்டோ தரம்

*குறைந்த ஒளியிலும் துல்லியத்துடன் பதிவு செய்யும் லென்ஸ் 

* எக்ஸீட் 7

* 4 கே விடியோவில் ஸ்லோமோஷன் காட்சிகளை பதிவு செய்யும் வசதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT