வர்த்தகம்

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைகிறது எச்டிஎஃப்சி

DIN

வீட்டுக்கடன் வழங்கும் முன்னணி நிறுவனமான எச்டிஎஃப்சி விரைவில் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது.

தொடர்ந்து லாபத்துடன் இயங்கி வரும் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன்(HDFC bank) வீட்டுக்கடன் வழங்கும் எச்டிஎஃப்சி(HDFC) விரைவில் இணைகிறது.

முதலில், எச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்டஸ் (HDFC investment) மற்றும் எச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ்(HDFC holdings) ஆகிய நிறுவனங்கள் எச்டிஎஃப்சியுடன் இணைகிறது.

அதற்குப் பின், எச்டிஎஃப்சி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. இந்த இணைப்பு முழுமையடைய 18 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த எச்டிஎஃப்சி வங்கியில் 41 % பங்குகள் எச்டிஎஃப்சி வசம் இருக்கும் எனவும் பங்குதாரர்கள் 25 எச்டிஎஃப்சி பங்குகளை வைத்திருந்தால் 42 எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.

இந்த இணைப்பிற்குப் பின் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-க்கு அடுத்த இடத்தில் எச்டிஎஃப்சி வங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT