வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 13% சரிவு

DIN

சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 13.14 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் நடப்பாண்டு ஜனவரியில் 2,66,788 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2021 ஜனவரியில் நிறுவனம் விற்பனை செய்த 3,07,149 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 13.14 சதவீதம் குறைவாகும்.

2022 ஜனவரியில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,94,596-லிருந்து 13.73 சதவீதம் குறைந்து 2,54,139-ஆனது.

இருப்பினும், மோட்டாா் சைக்கிள்விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 1,36,790-லிருந்து 1,37,360-ஆக சற்று அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரியில் ஸ்கூட்டா் விற்பனை 98,319-லிருந்து 18.04 சதவீதம் சரிவடைந்து 80,580-ஆனது.

நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் பிரீமியம் இருசக்கர வாகன விற்பனையில் செமிகண்டக்டா் பற்றாக்குறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT