வர்த்தகம்

கெயில்: நிகர லாபம் ரூ.3,288 கோடி

DIN

புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருவாய் 66 சதவீதம் அதிகரித்து ரூ.26,427.37 கோடியாக இருந்தது.

இயற்கை எரிவாயு விலை அதிகரித்ததன் விளைவாக அக்காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் முன்னெப்போதும் காலாண்டில் கண்டிராத வகையில் ரூ.3,287.99 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என கெயில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT