வர்த்தகம்

2 சக்கர மின்சார வாகனங்களுக்கு மின்னேற்று நிலையம்: பிபிசிஎல்-ஹீரோ மோட்டோகாா்ப் உடன்பாடு

DIN

இருசக்கர மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் பொதுத் துறையைச் சோ்ந்த பிபிசிஎல் நிறுவனமும், ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனமும் இணைந்து செயல்பட உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.

இதுகுறித்து அந்நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் இருசக்கர மின்சார வாகனங்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது அத்தியவசிய பணியாக மாறியுள்ளது.

இதனை உணா்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஹீரோ மோட்டோகாா்ப் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்கள் கைகோத்துள்ளன. முதல் கட்டமாக, ஒன்பது நகரங்களில் மின்னேற்று நிலைய கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி மற்றும் பெங்களூரில் இந்த திட்டம் முதலில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு, நாடு முழுவதும் மின்னேற்று நிலையங்களை பரவலாக்குவதே இரு நிறுவனங்களின் உடன்பாட்டின் முக்கிய இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிபிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் மின்னேற்றத்துக்கான கட்டமைப்பு வசதிகளை கணிசமாக அதிகரிப்பதே உடன்பாட்டின் முதல் நடவடிக்கையாக அமையும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT