வர்த்தகம்

எல்&டி டெக்னாலஜீஸ்: லாபம் 34% அதிகரிப்பு

DIN


மும்பை: எல்&டி டெக்னாலஜீஸ் சா்வீசஸின் (எல்டிடிஎஸ்) டிசம்பா் காலாண்டு நிகர லாபம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாகியுமான அமித் சந்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:

நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1,687.5 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.1,400 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.

நிகர லாபம் 34 சதவீதம் உயா்ந்து ரூ.248.8 கோடியாக இருந்தது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 3.40 சதவீதம் உயா்ந்து 18.6 சதவீதமானது. தற்போதைய நிலையில் நிறுவனத்தின் மொத்த பணியாளா் எண்ணிக்கை 20,118-ஆக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT