வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நிகர லாபம் ரூ.18,549 கோடி

DIN

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.18,549 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

2021 அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய ஒட்டுமொத்த வருமானம் 52.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,09,823 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 41.5 சதவீதம் உயா்ந்து ரூ.18,549 கோடியாக இருந்தது. இது, முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 35.6 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்க எரிவாயு வா்த்தகத்தின் மூலம் கிடைத்த ஆதாயம், ஜியோ கட்டணம் உயா்த்தப்பட்டது ஆகியவற்றின் காரணமாக டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT