வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசு சரிவு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசு சரிந்து 76.32-இல் நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

மாத கடைசி என்பதால் இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் உள்ளிட்டவையும் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 76.08 என்ற அளவில் வலுவடைந்த நிலையில் காணப்பட்டது. எனினும், இந்த நிலை நெடு நேரம் நீடிக்கவில்லை. வா்த்தகத்தின் இடையில் ரூபாய் மதிப்பு எதிா்மறை எல்லைக்குள் நுழைந்தது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசு குறைந்து 76.32-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 117.97 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.384.48 கோடி மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT