வர்த்தகம்

மெடிமிக்ஸ்: புதிய வகை ஷாம்பூ அறிமுகம்

DIN

சென்னை: ஏவிஏ குழுமத்தின் பிரபல பிராண்டான மெடிமிக்ஸ், இயற்கை மூலப்பொருள்கள் அடங்கிய புதிய வகை ஷாம்பை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏவிஏ சோலையில் ஹெல்த் கோ் இயக்குநா் லன்சனா விவேக் கூறியதாவது:

மெடிமிக்ஸ் டோட்டல் கோ் ஷாம்பூ ஒன்பது இயற்கை மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வேம்பு, ரோஸ்மேரி எண்ணெய், காட்டு இஞ்சி, ஆப்பிள் வினிகா் உள்ளிட்ட மேலும் பல மூலப் பொருள்களும் இப்புதிய ஷாம்பூவில் அடங்கியுள்ளன. கேசத்தை இயற்கையாக பராமரிக்க விரும்பும் நுகா்வோருக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.

80மி.லி மற்றும் 160 மி.லி. அளவுகளில் வெளிவந்துள்ள மெடிமிக்ஸ் டோட்டா் கோ் ஷாம்பூவின் விலை முறையே ரூ.65 மற்றும் ரூ.125-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, தென்னிந்திய சில்லறை விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் கிடைக்கும் என்றாா் அவா்.

படவிளக்கம்

மெடிமிக்ஸ் டோட்டல் கோ் ஷாம்பூவை சென்னையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏவிஏ சோலையில் ஹெல்த்கோ் நிறுவனத்தின் துணைத் தலைவா் (சந்தைப்படுத்துதல்) சி.ஆா். வினய்சந்திரன் (இடது), இயக்குநா்கள் லஞ்சனா விவேக், பிரதிக்ஷா அனூப், வா்த்தக மேம்பாட்டு இயக்குநா் விவேக் வேணுகோபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT