வர்த்தகம்

ஆண்டு வருவாயில் உச்சம் தொட்ட பிபிசிஎல்

DIN

புது தில்லி: பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடட் (பிபிசிஎல்), கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு மாா்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் நிறுவனம் ரூ.4,33,406 கோடியை செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் இதுவரை ஈட்டியிராத அதிகபட்ச வருவாயாகும்.

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தில் செயல்பாட்டு வருவாய் ரூ.1,23,550.93 கோடியாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் நிறுவனம் ரூ.2,130.53 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் நிகர லாபமான ரூ.11,940.13 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

இது தவிர, நிறுவனத்தின் பெட்ரெலியப் பொருள்கள் சந்தை விற்பனை கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் சா்வதேச சந்தையிலும் நிறுவனத்தின் விற்பனை கணிசமான வளா்ச்சியைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT