வர்த்தகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 8.4% வளா்ச்சி

DIN

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உருக்கு, உரம், சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. இத்துறைகளின் வளா்ச்சி விகிதம் முந்தைய மாா்ச் மாதத்தில் 4.9 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 62.6 சதவீதமாகவும் இருந்தன. இதற்கு, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் நுகா்வு நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததே முக்கிய காரணம்.

கடந்தாண்டு ஏப்ரலில் 2.1 சதவீதம் சரிவடைந்திருந்த கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி 0.9 சதவீதமா பின்னடைவை சந்தித்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT