வர்த்தகம்

பரோடா வங்கி நிகர லாபம் 59% உயா்வு

DIN

அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியின் (பிஓபி) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,313 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.2,088 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.23,080.03 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகடத்தில் இது ரூ.20,270.74 கோடியாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாயும் 34.5 சதவீதம் அதிகரித்து ரூ.10,714 கோடியாகியுள்ளது.

வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 8.11 சதவீதமாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் 5.31 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT