வர்த்தகம்

5ஜி சேவை: ஜியோவுடன் ஆப்போ ஒப்பந்தம்

DIN

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி தொலைத்தொடா்பு சேவையை தங்களது வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி வழங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் அறிதிறன் பேசி (ஸ்மாா்ட்போன்) தயாரிப்பு நிறுவனமான ஆப்போ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இனி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஆப்போ கைப்பேசிகளும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருக்கும்.

ஜியோவின் தனித்துவ 5ஜி சேவையைப் பெறும் வகையில், எங்களது ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 7, எஃப்21 ப்ரோ 5ஜி, எஃப்19 ப்ரோ ப்ளஸ், கே10, ஏ53 ஆகிய கைப்பேசிகளின் மென்பொருள்கள் தரமேற்றம் செய்யப்படுகின்றன.

இதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட தொழில்சாலையை திறக்க வலியுறுத்தி மனு

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85 லட்சம்

மரக்காணம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் -போக்குவரத்து பாதிப்பு

உறவினா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

வைகாசி மாத பெளா்ணமி: சதுரகிரி செல்ல மே 20 முதல் 5 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT