வர்த்தகம்

டாலரின் மதிப்பு உயர்வு... தங்கத்தின் விலை 1 வராத்தில் ரூ.1,500 சரிவு!

DIN



டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.1,500 ஆகவும், ஒரு மாதத்தில் ரூ.1,650 ஆக சரிவைக் கண்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்கம் ரூ.39,056 ஆக விற்பனையான நிலையில், கடந்த இரு நாள்களாக ரூ.37,400 ஆக விற்பனையாகி வருகிறது.  

தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் ரூ.1,500 ஆகவும், ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,656 குறைந்துள்ளது. 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.10 உயர்ந்து ரூ.4,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.37,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை குறைந்தே காணப்பட்டாலும் திங்கள்கிழமை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.61.70 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.61,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரித்து வரும் டாலரின் மதிப்பால், தங்கத்தின் விலை குறைய முக்கிய காரமணாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து டாலரின் மதிப்பு அதிகரித்தால், அது தங்கத்தின் முதலீடுகளை குறைப்பதற்கு வழிவகுக்கலாம். டாலரின் மதிப்பில் தங்கத்தை வாங்குவதும் குறையலாம். இவை மேற்கொண்டு தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைப்பதற்கு வழிவகுக்கலாம். இதனால் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1640-1700 டாலர்கள் என்ற நிலையிலேயே தொடரலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும், இந்தியாவில் தீபாவளி வரைக்கும் ஜாக்பாட் தான்... 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 50,200 - 51,500 என்ற நிலையிலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT