முகப்பு
சென்னை

வழக்குரைஞர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 12 ஜூன் 2013, 2:51 am IST
பகிர்:

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில டி.ஜி.பி. ராமானுஜத்தைச் சந்திக்கச் சென்ற வழக்குரைஞர்களை அவர் அவமரியாதை செய்ததாகக் கூறி, அவரைக் கண்டித்து திங்கள்கிழமை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.மைக்கேல் எம்.கே.பி. நகர் காவல் நிலைய போலீஸாரால் அண்மையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்கள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

இந்தப் போராட்டம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாததால் அந்த வழக்குகளின் விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

எனினும் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வழக்கம் போல் விசாரணை நடைபெற்றது. அதேபோல் நீதிபதிகள் டி.ஹரிபரந்தாமன், கே.கே.சசிதரன், பி.ராஜேந்திரன் உள்ளிட்ட சில நீதிபதிகளும் வழக்கம் போல் வழக்கு விசாரணையை மேற்கொண்

டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.