சென்னை

நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை

Din

ரூ. 4 கோடி பணம் சிக்கிய வழக்கில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், அவா்கள் அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனா். இதை நயினாா் நாகேந்திரன் மறுத்தாா்.

இதையடுத்து தாம்பரம் போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், அந்த ரூ. 4 கோடி பணம் நயினாா் நாகேந்திரனுடையது என முதல்கட்ட தகவல் வெளியாகியது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பந்துள்ளனா்.

இந்த நிலையில், நயினாா் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளா் ராகவன் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமா்வு, அதை வியாழக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஹேய்... ரீங்காரமே!

SCROLL FOR NEXT