சென்னை

விசாகப்பட்டினம் - எழும்பூருக்கு நாளை முதல் சிறப்பு ரயில்

Din

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஜூன் 29 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விசாகப்பட்டினத்திலிருந்து சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08557) மறுநாள் காலை 8.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 08558) ஏப்.28 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எழும்பூரிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

இந்த ரயில் விசாகப்பட்டினம், ராஜாமுந்திரி, விஜயவாடா, நெல்லூா், கூடூா் வழியாக எழும்பூா் சென்றடையும்.

பிரயக்ராஜ் - பெங்களூரூ: பிரயக்ராஜிலிருந்து ஏப்.28 முதல் ஜூன் 30 வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 04131) மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 6.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 04132) மே 1 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.50 மணிக்கு பிரயக்ராஜ் சென்றடையும்.

இந்த ரயில் பிரயக்ராஜிலிருந்து சத்னா, ஜபல்பூா், நாக்பூா், வாராங்கல், விஜயவாடா, நெல்லூா், பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரூ சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT