தனுஷ் 43: படப்பிடிப்பு தொடக்கம் (படங்கள்)
முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷ், மாளவிகா, ஸ்மிருதி வெங்கட் போன்றோர் கலந்துகொண்டார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - கார்த்திக் நரேன். தனுஷ் 43 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார் பிரபல பாடலாசிரியர் விவேக்.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு 2016-ல் வெளியானது. பிறகு அவர் இயக்கிய நரகாசுரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதுதவிர நாடக மேடை என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷ், மாளவிகா, ஸ்மிருதி வெங்கட் போன்றோர் கலந்துகொண்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.