விநாயகர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததற்கு இதுதான் காரணமா?
விநாயகர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததற்கான காரணம் குறித்து...
விநாயகர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது ஒரு பெண்பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பூனை விநாயகருக்குப் போக்குக் காட்டிக் கொண்டு மரத்தின் மேல் ஏறியது! பின் குதித்தது! விநாயகரை அலைக்கழித்தது! விநாயகருக்குக் கோபம் வந்துவிட்டது! அதைப் பிடித்துத் துன்புறுத்தி அடித்து விட்டார். அடிபட்ட பூனை எங்கோ சென்று மறைந்துவிட்டது. பிறகு அம்மாவைக் காண ஓடினார் விநாயகர்.
அன்னையைப் பார்த்த விநாயகருக்கு தூக்கிவாரிப் போட்டது! அம்மாவின் கன்னத்திலும் நெற்றியிலும் காயங்கள்!
"என்னம்மா ஆச்சு?....ஏன் இப்படி உடம்பெல்லாம் காயமா இருக்கிறது?" என்று கேட்டார்.
Advertisement
Advertisement
"ம்...இதெற்கெல்லாம் காரணம் நீதான்!..."
"என்னம்மா சொல்கிறாய்?...நானா இதெற்கெல்லாம் காரணம்?"
"ஆமாம்...நீ இன்று யாரையாவது துன்புறுத்தினாயா?"
விநாயகருக்கு தான் பூனைகூட விளையாடினதும், அதைத் துன்புறுத்தியதும் நினைவுக்கு வந்தது.
"ஆமாம்மா...சற்று நேரத்திற்கு முன் ஒரு பூனையை அடித்தேன்...ஐய்யய்யோ!...அந்தப் பூனையின் அன்னையோ, தந்தையோ, அண்ணனோ உங்களை இப்படித் துன்புறுத்திட்டாங்களாம்மா!..." என்று கேட்டார்
அம்மாவின் காயத்தைப் பார்த்ததும் விநாயகருக்கு அழுகையாய் வந்தது.
அழுகின்ற பிள்ளையை அணைத்தபடி, "மகனே!....என்னை யாரும் அடிக்கவில்லை. உயிர்கள் அனைத்திலும் நான் இருக்கிறேன் இல்லையா....அந்தப் பூனையில் இருப்பதும் நான்தானே....அதனால் நீ பூனையை அடித்த அடிகள் என்மீது விழுந்திருக்கின்றன!....நீ அறியாமல் செய்து விட்டாய்....வருந்தாதே...உயிர்கள் அனைத்திலும் சிவசக்தி வடிவமாக நானும் உன் தந்தையும் இருக்கிறோம்...யாருக்கு தீங்கு நேர்ந்தாலும் அது எங்களுக்கு நேர்ந்ததாகும்.
இந்தச் சொற்கள் விநாயகரின் உள்ளத்தில் பதிந்து விட்டன. அனைத்து உயிர்களிலும் அன்னையின் வடிவாகவே கண்ட அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை! அண்டங்கள் அனைத்தையும் சிவசக்தி வடிவாகக் கண்டதால் ஞானியருள் தலைசிறந்த ஞானியாகத் திகழ்கிறார் விநாயகர்!
Regarding the reason why Vinayagar remained unmarried
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.