சினிமா

அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் 'மிளகா'

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மிளகா'. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பூங்கொடி, சுஜா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர்கள் ஜெ

தினமணி

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மிளகா'. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பூங்கொடி, சுஜா ஆகியோர்

கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர்கள் ஜெகன், சிங்கம்புலி, ஜி.எம்.குமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன், பாண்ஸ், ஆரோக்கியதாஸ், மாயி சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் ரவிமரியா. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது...

''அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய முயல்வது மனித இயல்பு. இதை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறோம். இதில் நாயகன், மிளகாய் வியாபாரியாக நடிக்கிறார். படத்தின் முதல் ஹீரோ மதுரை காவல் தெய்வம் கருப்பணசாமி. இரண்டாவது ஹீரோ கதை. மூன்றாவதாகத்தான் நட்ராஜ். மிளகாயை தனியாக சாப்பிட்டால் காரமாக இருக்கும். அதே மிளகாயை சில காய்கறிகளுடன் சரியான அளவில் பக்குவமாக சமைத்துச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இந்தக் கதையின் நாயகனுடைய இயல்பும் அப்படித்தான். தனியாக இருக்கும்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் நாயகன் அவனுடைய நண்பர்கள் வட்டாரத்தில் நல்லவனாக இருக்கிறான். முழு படத்தையும் மதுரையில் படமாக்கியிருக்கிறோம். இதில் மதுரை மக்களின் நக்கல்,

நையாண்டியை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறோம். பாடல்கள் சூப்பர் ஹிட்

ஆகியுள்ளன. படம் சிறப்பாக வந்துள்ளதைப் பார்த்து, விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். மேலும் இந்தப் படத்தைத் தெலுங்கிலும் தயாரிக்கிறார்'' என்றார் இயக்குநர் ரவிமரியா.

இசை - சபேஷ்-முரளி. பாடல்கள் - விவேகா, ஏக்நாத், நந்தலாலா, தமிழமுதன்.

ஒளிப்பதிவு - பாலாஜி வி.ரங்கா. படத்தொகுப்பு - ஜெய்சங்கர். தயாரிப்பு - சூஜித் சர்க்கார், என். ஷியாம்சுந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்சி யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு!

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும்: கனிமொழி எம்.பி.

எகோவில் மலாத்தியாக நடித்தவர் பின்னணி!

பாகிஸ்தான் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 ஆக உயர்ந்த பலி!

நிபா வைரஸ் குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்! - மா. சுப்ரமணியன்

SCROLL FOR NEXT