முகப்பு
சினிமா

மரப்பாலம் இடிந்தது: தொடரும் படகுப் பயணம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே மரப்பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 15 நாள்களாக படகு மூலம் மக்கள் பயணித்து வருகின்றனர். திருவொற்றியூரை அடுத்த முக்கிய கிராமங்களில் ஒன்று சடையங்குப்பம். புழல் ஊராட

சினிமா

மரப்பாலம் இடிந்தது: தொடரும் படகுப் பயணம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே மரப்பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 15 நாள்களாக படகு மூலம் மக்கள் பயணித்து வருகின்றனர். திருவொற்றியூரை அடுத்த முக்கிய கிராமங்களில் ஒன்று சடையங்குப்பம். புழல் ஊராட

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:09 PM
பகிர்:

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே மரப்பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 15 நாள்களாக படகு மூலம் மக்கள் பயணித்து வருகின்றனர்.

திருவொற்றியூரை அடுத்த முக்கிய கிராமங்களில் ஒன்று சடையங்குப்பம். புழல் ஊராட்சி ஒன்றியத்திலிருந்த இக்கிராமம் சமீபத்தில்தான் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் பர்மா தமிழர்களுக்கான குடியிருப்பு, இரும்பு உருக்காலைகள் என முக்கிய பகுதியாகவே விளங்கி வருகிறது.

புழல் ஏரியின் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் இக்கிராமத்தைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிப்பது வாடிக்கையான நிகழ்வாகும். மேலும் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளநீரைக் கடக்க முயலும் பாதசாரிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்து போவதும் சாதாரணமான ஒன்றாகவே உள்ளது.

இவ்வாறு அவதிக்குள்ளாகும் மக்களுக்கு திருவொற்றியூர் செல்ல தரைப்பாலம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சமீபத்தில் புழல் ஏரி நிரம்பியதை அடுத்து கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் மரப்பாலம் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

தற்போது வருவாய்த்துறையின் ஏற்பாட்டின் பேரில் படகு மூலம் கிராம மக்கள் பயணித்து வருகின்றனர். இதற்கென ஒரு படகு, அதனை இயக்க நான்கு மீனவர்களை அதிகாரிகள் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். இது பகல் நேரத்தில்

கிராம மக்களுக்கு பயன் அளிப்பதாக இருந்தாலும் இரவு நேரங்களில் ஏதேனும் அவசரம் என்றால் சிரமம்தான் என்கின்றனர் இக்கிராமமக்கள்.

இப்பிரச்னை குறித்து சடையன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பி.தேவி கூறியது,

சடையன்குப்பம் பழைய கிராமங்களில் ஒன்றாக இருந்து தற்போது சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் எங்கள் பிரச்னை தொடர்கிறது. மரப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டு 15 நாள்களாகியும் இதனைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பிரச்னைக்குத் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். திருவொற்றியூருக்குச் செல்லும் வழியில் ஓடை, பக்கிங்காம் கால்வாயைக் கடந்து செல்ல உயர்மட்டப் பாலம் அமைத்து தரவேண்டும் என்றார் தேவி.

முழு கட்டுரையைப் படிக்க →