சினிமா

காலமானார் நடிகர் பெரிய கருப்புத் தேவர்

 சென்னை, செப். 18: திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 18) காலமானார்.  கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, செவ்வாய்கிழமை ம

தினமணி

 சென்னை, செப். 18: திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 18) காலமானார்.

 கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, செவ்வாய்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

 சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இருந்த இவர் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தாலாட்டு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன், பூ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

 பெரிய கருப்புத் தேவரின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கருமாத்தூரில் புதன்கிழமை தகனம் செய்யப்படுகிறது.

 தொடர்புக்கு: 98404 75551, 98405 71480.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT