சினிமா

வீட்டை விற்பனை செய்யும் முடிவில் மோனிகா!

தினமணி

அவசர போலீஸ் 100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மோனிகா.

தொடர்ந்து என் ஆசை மச்சான் படத்திலும் இந்திரா படத்திலும் ஒரு பாடலுக்கு வந்து போனார். பின்னர் அழகி படம் மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தார். பகவதி, சண்டக்கோழி, சிலந்தி, குறும்புக்கார பசங்க, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர், சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். மேலும் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் மோனிகாவிற்கு அவரது குடும்ப நண்பரான மாலிக் என்பவருடன் இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மோனிகா திருமணம் முடிந்த கையோடு சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தான் குடியிருந்து வந்த வீட்டை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். வீடு விற்பனை செய்வது குறித்து தனக்கு தெரிந்த நபர்களிடம் கூறியுள்ளாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT