சினிமா

‘திருடா திருடா’விலிருந்து என்னை ஏன் நீக்கினார்கள்? ‘பாபநாசம்’ ஆனந்த் மகாதேவன் கேள்வி

அந்தப் படத்தில் முறையாக ஒப்பந்தமாகி, எனக்கான உடைகளும் தயாராகின.

எழில்

பாபநாசம் படத்தில் நடித்த ஆனந்த் மகாதேவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இவர் கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்துள்ளார்.

அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாபநாசம் படத்துக்குப் பிறகு நான் அதிகத் தமிழ்ப் படங்களில் நடிப்பேனா என்று கேட்கிறார்கள். விஸ்வரூபம் 2  படத்தில் நான் நடித்துள்ளேன். அதில் என் நடிப்புத்திறமை நன்கு வெளிப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தபிறகு உத்தம வில்லனில் நடிக்க அழைத்தார் கமல். ஆனால் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை. பாபநாசத்துக்கு அழைத்தபோதும் பிஸியாகத்தான் இருந்தேன். ஆனாலும் எனக்காக தேதிகளை அட்ஜஸ்ட் செய்துகொண்டதால் நடிக்கமுடிந்தது.

நான் முதலில் மணி ரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் நடிக்க அழைக்கப்பட்டேன். அந்தப் படத்தில் முறையாக ஒப்பந்தமாகி, எனக்கான உடைகளும் தயாராகின. ஆனால் கடைசி நேரத்தில் என் வேடத்தில் எஸ்.பி. பாலசுப்ரணியம் எப்படி நடித்தார் எனத் தெரியவில்லை. அதன்பிறகு நான் எப்போது மணி ரத்னத்தைப் பார்த்தாலும் நான் மோசமான நடிகனில்லை என்று அவருக்கு உத்தரவாதம் அளிப்பேன். பாபநாசம் படத்தில் நான் நடித்ததை அவர் பார்ப்பார் என எண்ணுகிறேன்.

கிளைமாக்ஸ் காட்சியில் கமல் முன்னால் நடித்தது என் நடிப்புத் திறமையை மேலும் மெருகேற்றியது. இருவருக்கும் ஒரே அலைவரிசை இருப்பதால் அந்தக் காட்சியில் இருவராலும் சிறப்பாக நடிக்கமுடிந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT