முகப்பு
சினிமா

போலி ஃபேஸ்புக் ஐடி: சரத்குமார் போலீஸில் புகார்!

இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும்...

Updated On : 8 ஜூலை, 2015 at 3:02 PM
பகிர்:

சமூகவலைத்தளங்களில் தன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக நடவடிக்க எடுக்கவேண்டும் என்று நடிகர் சரத்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் காவல்துறையில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

என் பெயரில் பல புகைப்படங்களுடன் போலியான சமூக வலைத்தளங்கள் (ஃபேஸ்புக்) செயல்பட்டு வருகின்றன. அதில் விரும்பத்தகாத புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும், அதை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இன்று, தனது அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தின் முகவரியை ட்விட்டரில் வெளியிட்டார் சரத்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.