உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியான பாகுபலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாயை அள்ளியுள்ளது.
நேற்று வெளியான பாகுபலி படம் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் எங்குத் திரும்பினாலும் பாகுபலி விமரிசனங்கள்தான். தமிழ்நாட்டில் மட்டும் 379 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் தெலுங்கு பாகுபலிக்கு மட்டும் 46 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.
வெளியான முதல்நாளே மிரட்டும் வசூலைப் பெற்றுள்ளது, 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி. அமெரிக்காவில் வியாழக்கிழமை இதன் பிரிவியூ காட்சிகள் நடைபெற்றன. இதில் மட்டும் 8 கோடி ரூபாய் (1.29 மில்லியன் டாலர்) வசூலைப் பெற்றுள்ளது.
உலகம் முழுக்க வெளியான 4000 திரையரங்குகள் மூலம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. அடுத்த இரு நாள்களும் விடுமுறை தினங்கள் என்பதால் இதே வசூல் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் முதல் மூன்று நாள்களிலேயே குறைந்தது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுவிடும் என்று கணிக்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் பாகுபலியின் வசூல், பல சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.