நடிகர் சிபு சூர்யன் இன்ஸ்டாகிராம்
சினிமா

சின்னத்திரையில் ஜீவா? ரசிகர்களைக் குழப்பிய சீரியல் நடிகர்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற தொடரில் நடிக்கவுள்ளார்.

DIN

சின்னத்திரை நடிகர் சிபு சூர்யன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மீசையை எடுத்து தாடி இல்லாமல் இருக்கும் சிபு சூர்யன் பார்ப்பதற்கு நடிகர் ஜீவாவைப் போன்று இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சிபு சூர்யன். ரோஜா தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது.

இதனால், சிபு சூர்யனுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்தார்.

ரோஜா தொடரில் நடித்ததற்காக மூன்று முறை சின்னத்திரை விருதுகளையும் பெற்றுள்ளார்.

சிபு சூர்யன்

தான் நடித்த தொடர்களில் தாடி, மீசையுடனே நடித்துவந்த சிபு சூர்யன், தற்போது மீசையில்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மீசையில்லாத சிபு சூர்யன் அந்த படத்தில் பார்க்க நடிகர் ஜீவாவைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற தொடரில் நடிக்க நடிகர் சிபு சூர்யன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடரில் நடிப்பதற்காக அவர் இத்தோற்றத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT