சினிமா

வெளியானது 'கல்கி 2898ஏடி' டிரைலர்!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 'கல்கி 2898ஏடி' படத்தின் டிரைலர் இன்று(ஜூன் 10) வெளியிடப்பட்டுள்ளது.

DIN

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898ஏடி' திரப்படத்தின் டிரைலர் இன்று(ஜூன் 10) மாலை 7.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸுடன் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

'கல்கி 2898ஏடி' படத்தில் இதுவரை பார்த்திடாத வகையில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்களின் தோற்றம் அமைந்துள்ளது, ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.இந்த நிலையில், 2.20 நிமிட விடியோவாக 'கல்கி 2898' டிரைலரை படக்குழு உருவாக்கியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் டிரைலர் அமைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT