சினிமா

கூலி படத்தின் விடியோ கசிந்தது: லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்!

இணையத்தில் கசிந்த கூலி படப்பிடிப்புக் காட்சி - படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில், நடிகர் நாகர்ஜுனாவை வைத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் விடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சற்று முன், லோகேஷ் கனகராஜ் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ஒரேயொரு விடியோ பதிவு மூலம் ஏராளமான மக்களின் கடந்த இரு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது.

இவ்வாறு படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT