ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவது குறித்த எச்சரிக்கையை அப்படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள அமேசன் ப்ரைம் நிறுவனம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ஜன நாயகன், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க தாமதித்ததால் ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (ஜன. 20) நடைபெற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜன நாயகன் வெளியாகும் தேதி உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், ஓடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிட மத்திய தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை என்பதால், ஜன நாயகன் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.