ஆச்சர்யம்தான். இந்த வெள்ளிக்கிழமை ஒரே ஒரு தமிழ்ப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதுவும் புதுமுகங்கள் நடித்த இனி அவனே என்கிற படம். பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் படம் எதுவுமே இந்த வாரம் வெளியாகவில்லை.
கடந்த வாரம் தீபாவளி சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகின. தீபாவாளிக்கு அடுத்த வாரம் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது நவம்பர் 11 அன்று பெரிய படங்களை வெளியிட முடிவுசெய்துள்ளது திரையுலகம்.
நவம்பர் 11 அன்று - கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா, எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள சென்னை 28 - 2, காளிதாஸ் நடித்துள்ள மீன்குழம்பும் மண் பானையும், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் என 5 படங்கள் வெளிவரவுள்ளன. அதற்கு அடுத்த வாரம் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை, ஜீவா, காஜல் அகர்வால் நடித்துள்ள கவலை வேண்டாம், விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன. எனவே பெரிய நடிகர்ளின் படங்களைக் காண விரும்புபவர்கள் இந்த வாரம் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அடுத்தடுத்தக் காட்சிகளாகப் படங்கள் பார்த்து திளைப்பீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.