செய்திகள்

குடியரசு தினத்தில் வெளியாகவிருக்கிறது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்!

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட்

DIN

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், மாஸ்டர் ஆரவ் ஆகியோர் நடிப்பில், சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் விண்வெளி படம் ‘டிக்:டிக்:டிக்’. இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருதன் படத்துக்குப் பிறகு சக்தி செளந்தர் ராஜன் - ஜெயம் ரவி இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.  டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. டிசம்பர் 11-ம் தேதி யுவன் சங்கர் ராஜா, சுனிதா சாரதி பாடியுள்ள ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளார்களாம். 

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஜனவரி 26, 2018-ல் குடியரசு தினத்தன்று ‘டிக் டிக் டிக்’ படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT