செய்திகள்

பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் உடல்நலக் குறைவால் மறைவு! 

DIN

மும்பை: பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் (79) உடல்நலக் குறைவால் மும்பையில் திங்களன்று காலமானார்.

1960 மற்றும் 70 ஆம் ஆண்டு வாக்கில் இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் சசிகபூர். பாரம்பரியம் மிக்க குடுமபத்தைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர் தனது குழந்தை பருவம் முதல் (1940) சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.

1961 முதல் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருந்தார். ,

பிலிம்பேர் இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் சசிகபூரின் மறைவுச் செய்தியை நடிகர் மோகித் மார்வா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காலமான சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர்.  இவரது மனைவியான  ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT